பழம்பெரும் அரசியல்வாதி பாண்டியன் மறைவு

 – அஞ்சலிக்காக  கட்சி அலுவலகத்தில் …..            

மறைந்த தா .பாண்டியனின் உடல் அஞ்சலிக்காக கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தா பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருக்கு வயது 89.

இதையடுத்து மறைந்த அவரது உடல் சற்று நேரத்தில் அண்ணா நகர் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணியளவில் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இறுதியாக இரவு 7.00 மணியளவில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here