மதுப்பிரியர்களுக்கு ஆப்பு – தடுப்பூசிக்குபின்  42 நாட்கள்

 – மதுபானம் அருந்தக்கூடாது!

உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லட்சக்கணக்கில் உயிரிழந்து வருகின்ற நிலையில் பல நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது,

இந்நிலையில் ரஷியா முதலாவதாக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை இந்த வாரம் மக்களுக்கு போடத் தயாராகிவருகிறது. முதல் கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள்,  ஆசிரியர்களுக்கு இந்த தடுப்பூசி போட உள்ளதாக கூறியுள்ளது.

மது அருந்துவதால் கொரோனா தடுப்பு மருந்தை பாதிக்கும் என்பதால் இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களுக்கு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது, தடுப்பூசி போடுவதற்கு முன்பாக 2 வாரங்களுக்கும், தடுப்பூசி போட்ட பிறகு 42 நாட்களும் மதுபானம் அருந்தக்கூடாது என ரஷிய பொதுசுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் தலைவர் அன்னா போபோவா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here