2021- ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச எரிசக்தி மாநாடு’ நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 5- ஆம் தேதி வரை காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகளாவிய எரிசக்தி, சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது.
இதையொட்டி மோடி இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுவார் என்று இந்த மாநாட்டை நடத்தும் ஐ.எச்.எஸ். மார்கிட் அமைப்பின் துணைத்தலைவரும், மாநாட்டின் தலைவருமான டேனியல் யெர்கின் கூறினார்.
இந்த மாநாட்டில் எரிசக்தி தொழில் தலைவர்கள், வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்பத்தின் தலைவர்கள், நிதி தொழில்துறை சமூகங்கள், எரிசக்தி தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.