கல்யாணம் பண்றேனு ரூ. 70 லட்சம் வாங்கி ஏமாத்திட்டார் – பிரபல நடிகர் மீது புகார்

தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ரூ. 70 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்யா மீது புகார் அளித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த விட்ஜா என்பவர் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். அவர் பிரதமர், குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைனில் ஆர்யாமீது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் விட்ஜா கூறியிருப்பதாவது,

நான் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறேன். நானும், ஆர்யாவும் மூன்று ஆண்டுகளாக காதலித்தோம். என்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். என்னிடம் இருந்து ரூ. 70 லட்சம் வாங்கியிருக்கிறார் ஆர்யா.

பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். என்னிம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நான் அவரிடம் கேட்டேன். கொரோனா வைரஸ் பிரச்சனையால் பட வாய்ப்புகள் இல்லாமல் நானே நெருக்கடியில் இருக்கிறேன் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

பண விஷயம் குறித்து கேட்டபோது ஆர்யாவின் அம்மா என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆர்யாவுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது.

ஆர்யா மீது பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு பெண் பார்க்க நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி குறித்து தற்போது மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

மேலும் சயீஷாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஆர்யா பிக்கப் டிராப் தானே செய்து வந்தார் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆர்யாவும், சயீஷாவும் நடித்திருக்கும் டெடி படம் மார்ச் மாதம் 12ம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விட்ஜா அளித்திருக்கும் புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here