மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது கோர தாக்குதல்!

சவுதி அரேபியாவில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் நடத்தியது நாங்கள் தான் என ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏமன் போரில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போர் புரியும் சவுதிஅரேபியாவுக்கு அமெரிக்கா பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வந்தது.

இந்நிலையில்சவுதிக்கு அளித்து வந்த ஆதரவை அமெரிக்கா வாபஸ் பெற்ற போதிலும், ஹவுத்தி அமைப்பினர் எங்களை பொறுத்தவரை தீவிரவாத அமைப்பு தான் என சவுதி கூறுகிறது.

சவுதியில் உள்ள அரம்கோ என்ற மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தின் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல் வெற்றிகரமாக முடிந்துள்ளது என கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது குறித்து சவுதி அரசு எதுவும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் ஜெட்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் மற்ற விமான நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபருக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

ஏமன் அதிபருக்கு சவதி ஆதரவு அளிப்பதால் அங்குள்ள எண்ணெய் கிணறை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here