100வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்

வீடு திரும்ப போவதில்லை என அறிவிப்பு!

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய வேளாண்மை மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 

இந்த போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 100 ஆவது நாளை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 100 நாட்களில் ஏற்கனவே பலமுறை விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையிலும் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி நடத்திவருகின்றனர்.

வேளாண்மைச் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை முடிக்க போவதில்லை என்றும் வீடு திரும்பப் போவதில்லை என்றும் விவசாயிகள் உறுதியாக கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

மேலும் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here