ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து பயன்பாடு

தற்காலிகமாக நிறுத்திய டென்மார்க்!

கோபென்ஹேகன்:

ரத்த உறைதல் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ஆஸ்ட்ராஜெனிகா எனும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட நாடுகளில் 6ஆவது நாடாக டென்மார்க் விளங்குகிறது.

உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகளின் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதற்கு ஒரே தீர்வு கொரோனா தடுப்பு மருந்து என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியதை அடுத்து தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் ஆஸ்ட்ராஜெனிகா எனும் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பயன்படுத்தும் நபர்களில் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆஸ்டிரியா நாட்டில் 49 வயது செவிலியருக்கு இந்த தடுப்பு மருந்து போடப்பட்டது.

அவருக்கு ரத்தம் உறையும் பிரச்சினை ஏற்பட்டு பலியாகிவிட்டார். இதையடுத்து அந்த மருந்து பயன்பாட்டை அந்த நாடு நிறுத்திக் கொண்டது. அது போல் மேலும் 4 ஐரோப்பிய நாடுகளான எஸ்டானியா, லட்வீயா, லித்துவானியா மற்றும் லக்சம்பெர்க் ஆகிய நாடுகளும் ஆஸ்டராஜெனிகா மருந்து பயன்பாட்டை நிறுத்திக் கொண்டன.

அது போல் டென்மார்க் நாட்டிலும் இந்த தடுப்பு மருந்து பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில் மார்ச் 9-ஆம் தேதி ஐரோப்பிய பொருளாதார பகுதியில் தடுப்பு மருந்து செலுத்திய 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களில் 22 பேருக்கு ரத்தம் உறைந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் ஆஸ்டரோஜெனிகா தடுப்பு மருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என தெரிவித்தனர்.

கோபன்ஹேகனில் ஆகஸ்ட் 15 தேதிக்குள் நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here