மதம் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது – ஜகிவாசுதேவ்

எந்த வழிபாட்டு தலத்திலும் கைவைக்க அரசாங்கத்துக்கு உரிமையில்லை என்பதையே வலியுறுத்தி வருவதாக, ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு ஜகிவாசுதேவ் தெரிவித்துள்ளார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா, நேற்றிரவு முதல் விடியவிடிய நடைபெற்றது. ஆதியோகி சிலை முன்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து பேசிய சத்குரு ஜகிவாசுதேவ், ஏராளமான இந்து கோயில்கள் முறையான பாரமரிப்பின்றி சிதிலமடைந்து வருவது குறித்து வேதனை தெரிவித்தார். இதற்காகவே, கோயில்களின் நிர்வாகம் பக்தர்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்ததாக குறிப்பிட்டார்.

மதம் சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது என்பதே மதசார்பின்மை என சுட்டிக்காட்டிய அவர், கோயில்களில் அரசு வேண்டாம் எனக்கூறும் தான், அரசியல் செய்யவில்லை என்றார்.

இதற்காகவே தமிழ் மக்களின் உயிர்ப்புத் தன்மையை மேலும் தீவிரமாக்குவதற்காக இந்த கோயில் அடிமைநிறுத்து என்ற இயக்கம் தொடக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு ஆதரவு அளித்திடும்படியும் சத்குரு ஜகிவாசுதேவ் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here