– மாஸ் தகவலால், ரசிகர்கள் வெறித்தனம்.!
தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இன்னும் யார் நடிப்பார் என்று அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய் ஒரு ரகசிய உளவு அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியுள்ளது.மேலும், இந்த படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கே.ஜி.எஃப் படத்தின் சண்டைக் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என குறியீடு கூறியுள்ளார்.