– விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
முகக்கவசம் உரிய முறையில் அணியாவிட்டால் பயணிகளைத் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டிஜிசிஏ உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பயணிகளிடம் திரும்பத் திரும்ப அறிவுறுத்தியும் முகக்கவசத்தை உரிய முறையில் அணிய மறுத்தால் அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிவிட வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்திற்குள் நுழைவது முதல் வெளியேறுவது வரை கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.