மக்கள் சேவை மகேசன் சேவை

செல்லும் இடமெங்கும் சிறப்பு -தமிழ்க்கல்வியே நமக்கு பொறுப்பு

பெர்துபோஹான் இன்சான் பெக்கா மலேசியா– தேசியத் தலைவர், டாக்டர் பாலச்சந்திரன் கோப்பெங் வட்டாரத்தில் வசிக்கும் பல இன மக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், பி40 பிரிவைச் சேர்ந்த மக்கள், பள்ளி மாணவர்கள் ,  பொதுமக்களுக்கு அரிசி, மளிகைச் சாமான்கள், பள்ளிச்சீருடைகள், பள்ளி உபகரணப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி தனித்துவம் வாய்ந்தவராகத் திகழ்கிறார்.

கோப்பெங், கிந்தா கிளாஸ் எஸ்டேட், கத்ரி பிளாண்டேஷன் தோட்டத்தில் பணியாற்றிய பெற்றோர்  கோபால் – கங்காதேவி,இவர்களின்  அயராத உழைப்பால் மருத்துவக்கல்வியை முடித்து தற்போது மருத்துவராக, முழு நேரப்பணியாகச் செய்து மக்களுக்குச் சேவையாற்றும் பணியிலும் தொண்டு உள்ளத்தோடு ஈடுபட்டுள்ளார் இவர்.

கோப்பெங், பத்துகாஜா வட்டாரங்களில் உள்ள பல தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிச்சீருடை, காலணி, கலைக்கல்விக்குத் தேவையான தூரிகை, வண்ணம், கலை, காகிதம் போன்ற உபகரணங்களைக் கொடுத்து உதவி வருகின்றார்.

அதுமட்டுமன்றி சங்காட் பத்துகாஜா தமிழ்ப்பள்ளியில் சத்துணவுத் திட்டம் தடையின்றி மாணவர்களுக்குக் கிடைக்கவும் பெரும் பாங்காற்றியுள்ளார்.

இயலாதவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்வதே சேவை எனப்படும். சுய நல மிக்க இவ்வுலகில் எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் பிறர் வாழ முயற்சி செய்வதும் மனிதாபிமானம், மனித நேயத்தின் அடிப்படையில் செய்யப்படுவதாகும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனார் உரைத்த வரிகளுக்கிணங்க கோப்பெங் வட்டாரத்தில் இனம், மதம் பாராமல் அனைத்து இன மக்களுக்கும் பலவகையில் உதவி வருகிறார் டாக்டர் பாலச்சந்திரன்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவையான உணவு, வசிப்பிடம், உடைகள் இவைகளே அதிமுக்கியமானவையாகும். அது கிடைக்காமல் வறுமையில் வாடும் மக்களைத் துயரிலிருந்து மீட்பதே பெரும் கொள்கையாகக் கொண்டு சேவையாற்றுகிறார் டாக்டர் பாலச்சந்திரன்.

மக்கள் ஓசையின் செயல் அதிகாரி எஸ். கோபாலகிருஷ்ணனிடம் கோப்பெங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினம் 20 பிரதிகளை ஆறு மாதங்கள் வழங்க விண்ணப்பப் பாரத்தை ஒப்படைத்தார் சேவை மனப்பான்மை உள்ளம் படைத்தவரான டாக்டர் பாலச்சந்திரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here