மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா திடீர் ராஜினமா

– காரணம் என்னவாக இருக்கும்!

டெல்லி:

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா இன்று திடீரென தனது பதிவியை ராஜினாமா செய்தார்.

பிரதமரின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரின் ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகர் பி.கே.சின்ஹா ​​இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சின்ஹா, செப்டம்பர் 2019 முதல் மோடியின் முதன்மை ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சின்ஹா, 3 மத்திய அமைச்சகங்களில் செயலாளராக பணியாற்றினார் 2015 ஜூன் மாதம் மோடி அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். 2019-  இல் அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், அவருக்கு மூன்றாவது நீட்டிப்பு வழங்கப்பட்டது.

சின்ஹா எதற்காக ராஜினாமா செய்தார் என்ற உறுதியான விவரங்கள் தெரியவில்லை. ஆனாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினமா செய்ததாக கூறப்படுகிறது. பிரதமரின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரின் ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here