கடவுள் சொல்லிவிட்டார்’ பாட்டியை கல்லால் அடித்து கொன்ற பேரன்

 -ஆன்லைன் கேம் பயங்கரம்!

செல்போனில் ஆன்லைன் விளையாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட பேரன் தனது பாட்டியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உளுந்தூர்பேட்டை எல்லை கிராமத்தை சேர்ந்தவர் மாரி. இவரது வீட்டிற்கு பேரன் ஹரிஹரான் வந்து தங்கியிருந்துள்ளார். திண்டுக்கல் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி வேளாண் படிப்பில் 3 ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார் ஹரிஹரன். ஹரிஹரன் செல்போனில் தொடர்ந்து கேம் ஆடி வந்ததில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வந்த அவர் பாட்டி மாரி ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென கடவுள் சொன்னதாக கூறி பாட்டி மாரியை கல்லால் அடித்து கொன்றுள்ளார் ஹரிஹரன். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஹரிஹரனை பிடித்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மாரி உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் பாட்டியை கொலை செய்த பேரன் ஹரிஹரனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here