புடின் குறித்து ஜோ பைடன் விமர்சனம்

துாதரை திரும்ப பெற்றது ரஷ்யா?

மாஸ்கோ:
ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடினை விமர்சித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து உள்ளதால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, மேலும் மோசம் அடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு இறுதியில் நடந்த தேர்தலின் போது, அப்போது அதிபராக இருந்த, டொனால்டு டிரம்புக்கு, ரஷ்ய அதிபர் புடின் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னிக்கு விஷம் கொடுத்து கொலைசெய்ய முயற்சி நடந்தது.
புடின் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நவால்னி மீதான கொலை முயற்சிக்கு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீபத்தில், ‘டிவி’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘நவால்னிக்கு விஷம் கொடுத்ததால், புடினை கொலைக்காரன் என, கருதுகிறீர்களா’ என்ற கேள்விக்கு, ‘ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன்’ என, பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டது தொடர்பான கேள்விக்கு, ‘அதற்கு அவர் சரியான விலையைக் கொடுக்க நேரிடும்’ என, பைடன் கூறியுள்ளார்.
இந்த பேட்டி ஒளிபரப்பான அதே நேரத்தில், நவால்னிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதால், ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பதாக, அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை உருவாகியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கான துாதர், அனடோலி அன்டோவை, மாஸ்கோவுக்கு வரும்படி, புடின் நிர்வாகம் அழைத்துள்ளது.
அமெரிக்காவுக்கான துாதரை, திரும்பப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாயின.”பிரச்னை மேலும் தீவிரமடையாமல் இருக்க, ஆலோசனை நடத்துவதற்காக, அன்டோவை அழைத்துள்ளோம். ”
இரு தரப்பு உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை, இனி, அமெரிக்கா தான் முடிவு செய்ய வேண்டும்,” என, ரஷ்ய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியுள்ளார்.
டின் கூறுகையில், ”ஜோ பைடனின் பேச்சு, அமெரிக்காவின் கடந்த கால, நிகழ்கால வரலாற்றை நினைவுபடுத்துகிறது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here