இந்தியா, ரஷ்யா, சீனா கூட்டணி: டிரம்ப்-இன் கருத்து சர்ச்சையைக் கிளப்பியது!

கோலாலம்பூர்:

அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), தனது `ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில், “அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷ்யாவை, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டது,” என்று கூறி, சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்.

அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) ஆகியோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

டிரம்பின் இந்தக் கருத்து, ரஷ்ய எண்ணெய்யை வாங்கியதற்காக, இந்தியா மீது, அமெரிக்கா வரி விதித்ததால் ஏற்பட்ட வர்த்தக மோதலுக்கு மத்தியில் வந்துள்ளது.

இது, அமெரிக்கா-இந்தியா உறவுகளின் எதிர்காலம் மற்றும் உலகளாவிய அதிகாரக் கூட்டணிகள் குறித்து, புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

மாஸ்கோ, பெய்ஜிங் மற்றும் புது டெல்லி இடையே, நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து, வாஷிங்டன், அதிக எச்சரிக்கையுடன் இருக்கும் வேளையில், டிரம்பின் இந்தக் கருத்து, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here