இந்த பொருட்களை மட்டும் உங்கள் பாக்கெட்டில் வைத்து இருந்தால் எப்போதும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் தான் வீசும்

ஒரு சிலருக்கு எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் தோல்வி ஏற்படும். எவ்வளவு தான் அவர்கள் தங்களுடைய முயற்சிகளை தொடர்ந்து கொண்டிருந்தாலும் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி காண முடியாமல் தவிப்பார்கள்.

இது போன்றவர்கள் ஒரு சில பொருட்களை தங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நிச்சயமாக அவர்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசத் துவங்கும். எல்லா விஷயங்களிலும் அவர்கள் வெற்றி பெறுவதற்கான யோகம் கூடிவரும். அது என்னென்ன பொருட்கள்? என்பதை இனி இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நீங்கள் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களாக இருந்தால் உங்களுடைய மனதிற்குப் பிடித்த வேலை அமைவதற்கு இந்த ஒரு பொருளை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். இதனால் விரைவில் உங்களுக்கு நீங்கள் விரும்பிய வேலையும், எதிர்பார்த்த அளவிற்கு சம்பளத்துடன் கிடைக்கும்.

அப்படி நாம் என்ன பொருளை வைத்துக் கொள்ள வேண்டும்? விநாயகரின் அம்சம் பொருந்திய அரச மர இலையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வேலை தேடி சென்றால் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்.

நம்மிடம் இருக்கும் தன்னம்பிக்கையை உடைப்பதற்கு எதிர்மறை சக்திகள் நம்மை ஆட் கொள்ளும். இது போன்ற எதிர்மறை சக்திகள் நம்மை விட்டு ஒழிந்து போக கொல்லிக்கண் எனப்படும் ஒரு பொருளை நம்முடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றலாம். அதே போல குதிரை லாடத்தை வீட்டின் முன்புற பகுதியில் வைத்துக் கொண்டால் போதும்! எந்த ஒரு எதிர்மறை ஆற்றல்களும் உங்கள் வீட்டை சுற்றி வராது.

இன்று நம்மை ஆட்டிப் படைக்கும் நோய்களில் மிக முக்கியமான ஒரு நோய் என்றால் அது மன அழுத்தம் ஆகும். நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலை நம்மை மன அழுத்தத்திற்கு தள்ளி விட்டு விடுகிறது. ஒரு நாள் சிரித்தால், மறுநாள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் தான் அனைவரும் இருக்கிறோம். இப்படிப்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர பாக்கெட்டில் எப்போதும் வெள்ளை நிற கற்களை வைத்துக் கொள்ள வேண்டும். வெண்மை நிறத்தில் இருக்கும் கற்களை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க முடியுமாம். எல்லா செயல்களிலும் தோல்வியை தழுவி வெறுத்து போனவர்கள், ஏழு கழுதை வயதாகி விட்டது இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள், உங்களுடைய பாக்கெட்டில் இதை வைத்துக் கொள்ளலாம்.

ஒரு சிறிய அளவிலான மயிலிறகை மஞ்சள் அல்லது சிவப்பு வர்ண பட்டு துணியில் வைத்து சுற்றிக் கொண்டு அதை எப்பொழுதும் உங்கள் பாக்கெட்டில் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கும்.

உங்களை கண்டாலே மற்றவர்களுக்கு பிடிக்கவில்லையா? என்ன செய்தால் மற்றவர்களை கவரலாம்? என்கிற சிந்தனை அடிக்கடி உங்களுக்கு வருமா? பலபேர் மத்தியில் பேச தெரியாதவர்கள், கூச்ச சுபாவம் உடையவர்கள், தங்களை மற்றவர்களுக்கு பிடித்த மனிதர்களாக மாற்றிக் கொள்வதற்கு இந்த ஒரு பொருளை கூடவே வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகள் இணைந்தபடி இருக்கும் இந்த வேர் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். இந்த வேர் பெயர் ‘ஹத ஜோடி’ எனப்படும். இதனை எப்பொழுதும் உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் நீங்களும் மற்றவர்களுக்கு பிடித்த நபராக மாறி விடுவீர்கள். அதன் பிறகு அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் திரும்பிவிடும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here