சமயம் அறிவோம்- ஆலயம் செல்வோம்

மலாயாப் பல்கலைக்கழகம் இந்து சமயத்தின் ஏற்பாட்டில் 27.3.2021 (சனிக்கிழமை) மற்றும் 28.3.2021 (ஞாயிற்றுக்கிழமை) ‘சமயம் அறிவோம் ஆலயம் செல்வோம் 7.0’ என்ற சமய நிகழ்ச்சி ஏழாவது முறையாக நடைபெறவுள்ளது.

இந்து சமயம் சார்ந்த கலை, கலாச்சார அடிப்படையிலும் மாணவர்களிடையே இந்து சமயத்தின் அறிவை ஊட்டும் வகையிலும் பொது பிரிவில் புதிர்ப்போட்டி ஒன்றும் பல வகையான குழு விளையாட்டுகளும் நடைபெறவுள்ளன.

இப்புதிர்ப் போட்டியின் கூகுள் பாரமானது வரும் 24 மார்ச் 2021 நள்ளிரவு 11.59 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். ‘சமயம் அறிவோம் ஆலயம் செல்வோம் 7.0’ என்னும் இச்செயல்திட்டம் மாணவர்களிடையே சமய நெறியை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சமயம் தொடர்பான அறிவையும் சிந்தனையையும் மேன்மேலும் வளரச் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இச்செயல்திட்டம் கடந்த ஆறு முறையும் நேரலையில் நடந்த பட்சத்தில், இவ்வாண்டு கோவிட் பெருந்தொற்றினால் அமல்படுத்தப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் முதன் முறையாக இயங்கலையில் நடைபெறவிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், இவ்வாண்டின் புதிய முயற்சியாக மற்ற பல்கலைக்கழக மாணவர்களுடனும் இணைந்து வெற்றிகரமாக இந்நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இவ்வனைத்துப் போட்டி களிலும் இடைநிலைப் பள்ளி முதற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் வரை கலந்துகொண்டு வெற்றி வாகை சூடலாம். ஆகவே, மறவாது 27 ,  28ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் திரளாக வருகைபுரிந்து ஆதரவு நல்கும்படி ‘சமயம் அறிவோம் ஆலயம் செல்வோம் 7.0’ செயற்குழு ஏற்பாட்டாளர்கள் பணிவன்புடன் பெரும் எதிர்ப்பார்ப்புடனும் கேட்டுக் கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு மலாயா பல்கலைக்கழக

இந்து சங்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தையும் (Persatuan Hindu University Malaya –) அல்லது படவரியையும் (phumum) அணுகி தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here