அற்புதங்கள் நிகழ்த்தும் ஆதித்ய ஹ்ருதயம்

சூரிய வழிபாடு என்பது 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் இருந்ததாக எகிப்து, கிரேக்கம், ஐரோப்பியா, மெசபடோமியா நாகரிங்கள் குறிப்பிடுகின்றன.சூரிய வழிபாடு குறித்து மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் ஆகியவன விளக்குகின்றன. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் சூரியனுக்கு கோவில்கள் உள்ளன.

சூரியனே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பரம்பொருள் என குறிப்பிட்டு பாடப்பட்டதே ஆதித்ய ஹ்ருதயம் ஆகும். சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய முனிவர், அன்னை பராசக்தியை நோக்கி தவமிருந்த போது, உலக நன்மை மற்றும் அமைதி பெறுவதற்காக அன்னை பராசக்தி உபதேசித்ததே ஆதித்ய ஹிருதயம் என சொல்லப்படுகிறது.

நல்ல உள்ளம், மன தைரியம், உள்ளார்ந்த ஆற்றல், சக்தி ஆகியவற்றை கொடுக்கக் கூடிய சக்தி ஆதித்ய ஹிருதயத்திற்கு உண்டு. அன்னை பராசக்தியிடம் இந்த மகா மந்திரத்தை பெற்ற அகத்தியர், தகுதியான ஒருவருக்கு இதை உபதேசித்தால் மட்டுமே இந்த உலகம் நலம் பெறும் என நினைத்து, மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராம பிரானை தேர்வு செய்து இந்த மந்திரத்தை உபதேசம் செய்தார். ராவணனுடனான போரில் ராமரை வெற்றி பெற செய்தது இந்த ஆதித்ய ஹிருதயம் தான் என ராமாயணம் சொல்கிறது.

நோய்கள், மனச்சோர்வு, உடல் ஆரோக்கியம் பெற, கஷ்டங்கள், பயம் நீங்க, ஆயுள் அதிகரிக்க, எந்த நெருக்கடி காலத்தையும் சமாளிக்க ஆகிய நலன்களை வழங்கக் கூடிய அபூர்வ ஸ்லோகம் இந்த ஆதித்ய ஹிருதயம் ஆகும்.

உங்களின் இக்கட்டான காலத்திலும், ராவணன் போன்ற பெரிய எதிரியே வந்தாலும், எதிரிகளின் தொல்லையை அனுபவிப்பவர்கள் இந்த ஆதித்ய ஹ்ருதயம் பாடினால் உங்களின் ஆபத்துக்கள் நீங்கி, கஷ்ட காலங்களில் மனதில் தோன்றும் பயம் நீங்கும். மனம் புத்துணர்ச்சி பெறும்.

சூரிய மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வர மனம் மற்றும் உடல் பலத்தை பெறுவதோடு, அனைத்து வித நோய்களும் நீங்கி நலம் பெறலாம்.

நாம் தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும். அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூரிய மந்திரங்களை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம்.
அதே போல் நீராடி சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல சூரிய பகவானின் அருள் நிறைந்து கிடைக்கும்.

சூரிய காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here