பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) 1,384 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 335,540 ஆக உள்ளது.
ஒரு டுவீட்டர் பதிவில் சுகாதார அமைச்சகம் அதே 24 மணி நேரத்திற்குள் ஆறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் இறப்பு எண்ணிக்கை 1,244 ஆக உள்ளது. மேலும் 1,058 நோயாளிகள் மருத்துவ வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதாவது 319,842 பேர் இந்த நோயிலிருந்து இன்றுவரை மீண்டுள்ளனர்.
மொத்தத்தில் நாடு முழுவதும் 14,454 சம்பவங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையிலிருந்து, 148 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். 62 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.