பாகிஸ்தான், வங்கதேச பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது

– சவுதி அரேபியா நிபந்தனை!

பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட ஒருசில நாடுகளின் பெண்களை சவுதி அரேபிய ஆண்கள் திருமணம் செய்ய கூடாது என சவுதி அரேபிய அரசு திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுபாகிஸ்தான் வங்கதேசம் சாட், மியான்மர் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களை சவுதி அரேபிய ஆண்கள் திருமணம் செய்யக்கூடாது என சவுதி அரேபிய ஆண்களுக்கு அந்நாட்டு அரசு திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது

அப்படியே ஒருவேளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால், அரசுக்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு கடும் கட்டுப்பாடுகள் உடன் தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய நாட்டில் திடீரென ஆண்களுக்கு இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த கட்டுப்பாட்டுக்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here