மக்களை ஒருங்கிணைக்கும் மகத்துவம்

பெஞ்ச்(மின்) பெரியசாமியின் அலசல்:

ஜோகூர் மாநிலத்தில் உதயமாகிறது!

ஒரு நல்ல செய்தியை கேட்கும்போது மனம் மிக மகிழ்ச்சியடைகிறது. ஒரு தனிமனித மகிழ்ச்சியைவிட பொது மகிழ்ச்சிதான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அதை அனுபவித்தால் , அனுபவித்தினால்  புரிந்துகொள்ள முடியும்.

இப்படியோர் அற்புதமான பொதுச்சிந்தனையை  வரவேற்று வாழ்த்தினைத் தூவியிருக்கிறார் ஜோகூர் மாநில சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் .

கடுகு சிறுத்தாலும்  காரம் போகாது என்பார்கள், திருக்குறளும் அப்படித்தான். சின்ன வரிகளில் உலகமே அடங்கிவிடுவதுபோல் கூறி  பெரிய சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் திருவள்ளுவர்.

விசயம் சாதாரணம்தான், ஆனாலும் அதில் அடங்கிக் கிடப்பவை அமுத சுரபியின் அதீத நன்மைகளாகும். அப்படி என்ன சொல்லியிருக்கிறார் சுல்தான் இப்ராஹிம் ?

ஒட்டு மொத்த மாநிலத்தை ஒன்று படுத்தும் உத்வேகத் திட்டத்தின் ஓர் ஆமைப்புக்கு நல் ஆலோசனை வழங்கியிருக்கிறார். அந்த ஆலோசனை மாநில மக்களுக்கானது. துரும்பு கூட விடுபட்டக்கூடாது என்பதற்கான மனித நேய ஆலோசனை.

ஜோகூர் மண்ணின் சுதந்திர குழந்தைகள் ஒருகிணைப்பு  ஒன்றை நிறுவும் திட்டத்தை ஆழமாக பரிசீலிக்குமாறு கூறியிருக்கிறார் அவர். இன,நிர ,பேத  , வேற்றுமையற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரின்  ஆழமான எண்ணம்.ஏன் இதைச்செய்ய வேண்டும் என்பதற்கு ஜோகூர் சுல்தான் அழகான பதில் கூறுகிறார்.

மக்கள் ஒற்றுமை இல்லாமல் ஏதும் சாதனையாக அமையாது. முதலில் மக்கள் சிந்தனை மண்ணின் சிந்தனையாக மாறவேண்டும்.

மக்கள் சிந்தனை ஒன்றுபடவேண்டும் எனில் முதுகெலும்பாக அனைவரும் ஒன்றுபடவேண்டும். நமது நாடு , நமது தேசம் என்று அனைத்தனை மக்களும் ஒன்றுபட்டுவிட்டால் அந்த  நிலம் அற்புதங்களைப் பெற்றுவிடும். வளர்ச்சித்திட்டங்கள் வானோக்கி உயர வழி கிடைத்துவிடும். 

பின்னர் தடை என்பதற்குத் தடை விதித்துவிடலாம். தடையில்லாத ஒருமித்த எண்ணம் தோன்றிவிட்டால் செயல் வேகம் புயல் வேகம் கண்டுவிடும்.

இதற்கான  அமைப்புதான் Persathuan Anak bangsa Johor ஜோகூர் மாநில மக்களை ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தி இதற்கு உண்டு என்பதை நிச்சயம் நம்பலாம்.

கருத்து வேறுபாடுகள் இருக்குமாயின்  வளர்ச்சியில் நிச்சயம் தடை இருக்கும். ஒருதரப்பின் மனம் வேதனைப்பட்டால் அது வளர்ச்சியாகாது. அனைத்தும் அனைவருக்கும் பொருந்த வேண்டும். அதற்காகத்தான்  இந்த அமைப்பு . இது முறையாக அமைதல் வேண்டும் என்பதே சுல்தான் இப்ராஹிம் கூறும் அலோசனையாக இருக்கிறது.

இதே போன்று மாநிலங்கள்  தோறும் முயன்றால் மலேசியம் வசப்படத்தானே செய்யும்! மக்களின் ஒரே இசை மங்களமாக முழங்கட்டும்.

கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here