இத்தாலியில் “வெர்டிபோர்ட்” உணவகம்..

 பயணிகளை 100 அடி உயரத்திற்கு கொண்டு செல்லும் மின்சார பறக்கும் டாக்ஸி

சீன வான்வழி இயக்க நிறுவனமான இஹாங், இத்தாலிய கட்டடக்கலை நிறுவனமான ஜியான்கார்லோ ஜீமா டிசைன் குரூப் (GZDG) உடன் கூட்டு சேர்ந்து, ஐரோப்பிய யூனியன் சந்தையில் அதன் வான்வழி இயக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்தியுள்ளது.

ஒன்று அல்லது இரண்டு பயணிகளை 100 அடி உயரத்திற்கு கொண்டு செல்லும் மின்சார பறக்கும் டாக்ஸியை இஹாங் உருவாக்கியுள்ளது.

சோதனை பயிற்சிக்காக நிறுவனம் 40 விமான டாக்ஸிகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இத்தாலிய கட்டடக்கலை நிறுவனமான ஜியான்கார்லோ ஜீமா டிசைன் குரூப் இத்தாலியில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வெர்டிபோர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஆப்பிரிக்க பூர்வீக மரமான போபாப் எனும் மரத்திலிருந்து ஈர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல்-இணக்கமான இந்த வெர்டிபோர்ட் 30 மீட்டர் உயரமுள்ள கோபுரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இது எஃகு , லேமினேட் மர அமைப்பு, காத்திருப்பு அறை, ஒரு கபே, 200 சதுர மீட்டர் பரந்த உணவகம், லிப்ட் வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. டேக்-ஆஃப், -லேண்டிங் தளம் கட்டடத்தின் மொட்டை மாடியில் அமைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here