கழிவு நீரில் கோவிட்-19 கிருமித் தடயங்கள்

சிங்கப்பூர்-

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) விடுதி ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவு நீரில் தொற்று ஏற்படுத்தக்கூடிய மரபணு மூலக்கூறு (கோவிட்-19 ஆர்என்ஏ) தடயங்கள் காணப்பட்டதால் அங்கு தங்கியுள்ள மாணவர்களுக்கு அதிரடியாக கோவிட்19 சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இதற்காக நேற்று சிறப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டன.மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கைத் தொலைபேசி, அடையாள அட்டை, மாணவர் அட்டை ஆகியவற்றுடன் வரிசையில் நின்று சோதனை செய்து கொண்டனர்.

யுடவுன் என்று அழைக்கப்படும் நார்த் டவர் இன் யூனிவர்சிட்டி டவுனில் 13 வீடுகளில் உள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டதாக என்யுஎஸ் தெரிவித்தது.

கொவிட்-19 சோதனை முடிவுகள் தெரியும் வரை வீட்டில் தங்கி இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் வீடுகள் உள்ள இடத்தை சுற்றி தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here