மும்பை கொரோனா மருத்துவமனையில் தீ

  இருவர்  பலி.. பலர் காயம்

மும்பை:

மும்பை மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள ட்ரீம்ஸ் மால் சன்ரைஸ் மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மும்பையில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் இங்கு அதிக அளவில் நோயாளிகள் சேர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று திடீரென இரவு நேரத்தில் இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தது. பெரிய போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த தீ விபத்தில் காயம் அடைந்த 2 பேர் பலியானார்கள். இந்த தீ விபத்தில் காயம் அடைந்த மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here