இந்த வயதினரை குறிவைத்து தாக்கும் கொரோனா”.

 எச்சரிக்கும் தலைமை பொது சுகாதார அதிகாரி.!!

கனடாவில் கொரோனா வைரசால் இந்த வயதுடையவர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கனடா தலைமை பொது சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் முதலில் வயதானவர்களை அதிகமாக தாக்கியது. தற்போது உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் இளம் வயதினரை தாக்குகிறது . பிரிட்டனில் 10 – 19 இளம் வயதினரே கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கனடாவிலும் 20 – 39 வயதிற்குட்பட்டவர்கள் கொரோனா வைரசால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Theresa Tam கூறியுள்ளார்.

இதுகுறித்து Theresa Tam கூறியதாவது, ” கொரோனா வைரஸ் குறிப்பாக இளம் வயதினரிடையே அதிகமாக பரவுகிறது. இதற்கு காரணம் அவர்கள் சரியாக சமூக இடைவெளியை கடைபிடிப்பதே இல்லை. குறிப்பாக SARS-Cov2 வைரஸ் பரவி வருவது மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதன் மூலம் மட்டுமே தொற்று அதிகரிக்காமல் தடுக்க முடியும்” என்று எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here