கோவிட் தடுப்பூசித்திட்டம்  

இன்றைய அலசல் 2

மூத்தவர்களை இன்னும் சென்றடையவில்லையே!

கோவிட் தடுப்பூசித்திட்டம் அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் அதன் நகர்வு அத்துணை ஆரோக்கியமாக இல்லை என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கிறது.

முன்னிலைப் பணியாளர்களுக்கு முதலில் என்பது நியாயமான செயல்பாடுதான் . இதுவரை 566,200  பேருக்கு தடுப்பூசி போட்டப்பட்டிருப்பதாகவும் செய்தி இருக்கிறது. இவர்களில் முன்னிலைப் பணியாளர்கள் அதிகம் என்பதை நம்புகிறோம். அதே வேளை மூத்த வயதினர் மிகச்சுலபமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி பற்றிய பேச்சே தெளிவாக இல்லை. 

பலர் விவரம் புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறனர். எங்கு செல்வது என்பதும் கேள்வியாக இருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அறிவுரைகள் அதிகம். ஆனால் அதற்கான இடம் எங்கே? இப்படித்தான் மக்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது

வீர பிரதாப படைகளோடு சென்று அமைசச்ர்கள் வலிக்காமல்  தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். ஆனால் சாதாரண மக்களால் அது இயலுமா? மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட அமச்சர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்களாம்.  வரவேற்கிறோம்.

பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கையோடுதான் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு இன்னும் முதல் சுற்றே முடியவில்லை என்பதாவது தெரிகிறதா?

அந்தந்த வீடைப்பு பகுதியிலுள்ள சுகாதாரப் பிரிவினர் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடுவதில் என்ன சிரமம் இருக்கிறது? அல்லது அப்பகுதியிலுள்ள பொது மண்டபத்திலும் செய்யலாமே! 

கடலில் பெருங்காயம் கரைத்த கதையாகத்தான் தடுப்பூசி போடும் செயல் நடைபெறுகிறது. 

மைசெஜாத்ரா வழி பதிந்துகொள்வது சாத்தியமானதாகத் தெரியவில்லை. அதை விடுத்து மாற்றுவழிகளை ஆராயவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

-கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here