குளிர் காலங்களில் தோல் வறண்டு போகாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

சரும வறட்சியானது உடலில் உள்ள வெளி உறுப்புகள் பலவற்றையும் பாதிக்க கூடும். உதடுகள் வறண்டு போகுதல், முகத்தில் வறட்சியால் தோல் உறிதல், பாத வெடிப்பு, முடி உதிர்வு போன்ற முக்கிய பாதிப்புகள் இதில் அடங்கும்.நமது உடலுக்கு குளிர் காலத்தில் அதிக பாதுகாப்பு தேவைப்படும்.

இதில் வெளியில் உள்ள தோல் முதல் உள்ளே இருக்கும் எதிர்ப்பு சக்தி மண்டலம் வரை அடங்கும். குளிர் காலங்களில் பலருக்கும் வருகின்ற பிரச்சனை, சருமம் வறண்டு போகுதல். இதை சரிசெய்ய பல்வேறு வழிகளை முயற்சித்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அவை எல்லாமே தோல்வி அடைத்திருக்கும். எதனால் இப்படி சருமம் வறண்டு போகிறது, இதை எப்படி சரி செய்வது, இதற்கான இயற்கை வழிகள் என்னென்ன போன்ற அனைத்தையும் இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

சரும வறட்சி : சரும வறட்சியானது உடலில் உள்ள வெளி உறுப்புகள் பலவற்றையும் பாதிக்க கூடும். உதடுகள் வறண்டு போகுதல், முகத்தில் வறட்சியால் தோல் உறிதல், பாத வெடிப்பு, முடி உதிர்வு போன்ற முக்கிய பாதிப்புகள் இதில் அடங்கும். இவை அனைத்திற்கும் மூல காரணம் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போகுதல் தான். மேலும் நமது குடல் பகுதியானது வறண்டு போனாலும் இப்படிப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். இதை எளிதாக போக்க நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நல்ல உணவுகள் : உடலில் உண்டாகும் வறட்சியை எளிதாக போக்க தினமும் சாப்பிட கூடிய உணவில் உலர் பழங்கள், ஆலிவ் ஆயில், தேங்காய், நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு செய்து வந்தால் குளிர் காலத்தில் உடல் வறட்சி பாதிப்பு குறையும்.

ஈரப்பதம் : உங்கள் சருமத்தை குளிர் காலங்களில் ஈரப்பதாமாக வைத்து வறட்சியை போக்க சில இயற்கை ரீதியான மாய்சரைசரை பயன்படுத்தலாம். குறிப்பாக கற்றாழை ஜெல் கொண்ட மாய்சரைசர் மிக சிறந்தது. மேலும் அவ்வப்போது முகத்திற்கு இதை கொண்டு மசாஜ் செய்தும் வரலாம்.

பால் : பாலை முகத்தில் நேரடியாக தடவுவதை விடவும், அதை குடித்து வருவதால் நிறைய நன்மைகள் உண்டு. 2015 ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் பாலை தினமும் குடித்து வந்தால் சருமம் வறண்டு போவதை தடுக்கும் என்று கண்டறிந்துள்ளனர். இதிலுள்ள பாஸ்போலிப்பிட் என்கிற ஒரு வகையான கொழுப்பு சரும வறட்சியை குறைக்க உதவுமாம்.
தேங்காய் எண்ணெய் : சரும வறட்சியை எளிதில் போக்க கூடிய அற்புத பொருள் தான் இந்த தேங்காய் எண்ணெய். இதில் உடலை இயற்கையாகவே ஈரப்பதமாக வைக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே வறண்ட சருமத்தை ஊட்டமளித்து பாதுகாக்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். தினமும் தூங்க போவதற்கு முன் கால்களில் இதை தடவினால் நல்ல பலனை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here