கிரெட்டா துன்பெர்க் சிலை நிறுவிய பல்கலைக்கழகம்

-கோபமுற்ற மாணவர்கள்!

இங்கிலாந்தின் வின்சஸ்டர் பல்கலைக்கழகம் தங்களது வளாகத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கிற்கு சிலை நிறுவியிருப்பது பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். அத்துடன் பல்வேறு தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் வின்சஸ்டர் பல்கலைக்கழகம் கிரெட்டா துன்பெர்க்கின் சிலையை தங்களது வளாகத்தில் நிறுவியுள்ளது. இதன் மதிப்பு தோராயமாக இந்திய மதிப்பீட்டில் ரூ.24 லட்சமாகும். இந்த சம்பவம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்துவரும் இந்த சூழலில் கிரெட்டா துன்பெர்க்கிற்கு இவ்வளவு மதிப்பில் சிலை அமைத்திருப்பது ஏன் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் அவர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக முதல்வர் மெகான் பால் கூறியதாவது “கிரெட்டா துன்பெர்க் அனைவரும் அறிந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்.

இவர் உலக அளவில் பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்குக் குரல் எழுப்பி அதற்கான தீர்வை அளிக்க உதவியுள்ளார். இவரின் உருவச் சிலையைப் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவியது மாணவர்கள் மத்தியில் புது உத்வேகத்தைக் கொடுக்கும் என நம்பினோம். மேலும் இதற்காக மாணவர்கள் மத்தியில் எந்த வித நிதியும் வசூலிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here