வெற்றி மாறனின் விடுதலை –

தேசிய விருதுபெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி – சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கிவருகிறார். சத்தியமங்கலம் காட்டுக்குள் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையின் புறநகர் பகுதியில் நடைபெற்றுவருகிறது.

எப்போதும் நாவல்களைப் படமாக்குவதில் ஆர்வம் கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், இம்முறை சிறுகதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி, 1992- ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாகக்கொண்டே இப்படம் எடுக்கப்படுகிறது.

இதில் போலீஸாக சூரியும், போராளியாக விஜய்சேதுபதியும் நடிக்கிறார்கள். முதலில் விஜய்சேதுபதிக்கு பதில் பாரதிராஜா நடிக்கயிருந்தார். அவரைவைத்துதான் ஷூட்டிங்கும் தொடங்கியது. ஆனால், சத்தியமங்கலம் காட்டுக்குள் குளிர் அதிகம் இருந்ததால் பாரதிராஜாவின் உடல் ஒத்துழைக்கவில்லை. இதனால் பாரதிராஜா படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி படத்தில் இணைந்தார்.

விடுதலை

எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தின் போட்டோஷூட் நிறைவடைந்துவிட்டது. வெகுவிரைவில் இப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கி தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் வென்ற ‘விசாரணை’ படம்போன்று போலீஸ் கதையான இப்படத்துக்கு ‘விடுதலை’ எனப்பெயரிட்டுள்ளார் வெற்றிமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here