சுபாங் ஜெயா, பண்டார் சன்வேயில் அடையாளம் தெரியாத நபர்களால் ஒருவர் இரண்டு முறை சுடப்பட்டார். மதியம் 1.30 மணியளவில் PJS11/28 இல் உள்ள கைபேசி பாகங்கள் விற்பனை கடையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தலை மற்றும் வயிற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் இன்னும் உயிருடன் இருக்கிறார், ஒரு ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது என்று அது கூறியது.









