கண்ணீரைக் கட்டிப்போட முடியுமா?

பெஞ்ச் பெரியசாமியின்   அலசல்

இழப்பு நேருமுன் இயலாமை  நீக்குக!

நாட்டின் உயிர்க்கொல்லியாக கருதப்படுகின்றவைகளில் அபாயகரமாகப் பேசப்படுவது சாலை மேம்பாட்டுப்பணிகள்தான் முதலிடத்தில் இருக்கிறது. முன்பெல்லாம் சாலை விபத்துகளே மிக மோசமான விபத்துகளாக கருதப்பட்டன, சாலை விதிகளை மீறுவதால் விபத்துகள் நிகழ்ந்தன. நிகழகின்றன.

அனைத்திற்கும் விதி மீறல்கள்தான் காரணம் என்று தெரிந்தும் அதைசெய்கிறவர்களாகத்தான் பலர் இருக்கின்றார்கள் .  சாலை மேம்பாடு அல்லது சாலை மேம்பால அடுக்குப்பாலங்கள் நிர்மாணிப்பிலும் இதே மீறல்கள்தான் நடக்கின்றன என்பதற்கு உதாரணம் தேவையில்லை.

கடந்த ஆறு மாதங்களில் மூன்று விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன என்பது பொறுப்பின்மை என்பதையே காட்டுகிறது. இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார் பாதுகாப்பான சமூக உறவு அமைப்பின் தலைவரான டான்செரி லீ லாம் தாய்.

முதல் விபத்தே நிகழாமல் இருந்திருக்கவேண்டும். அவ்விபத்து நடப்பத்ற்கு எது காரண்ம்?  பணியிடப்பாதுகாப்புப்பிரிவின் பொறுப்பற்ற தன்மையே முதன்மை காரணமாக இருந்திருக்கிறது. அப்பிரிவின் பாதுகாப்பில் அலட்சியம் கூடியிருப்பதால்தான் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 

தொடர்ந்து மூன்று விபத்துகள் என்பது கவனக்குறைவின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். முதல் அசம்பாவிதம் நிகழ்ந்த போதே கடுமையான் பாதுகாப்பு அமசங்களில் நிறைவானவற்றைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். அந்த விபத்துக்குப்பின்னரும் அலட்சியம் தலைதூக்கியிருந்திருக்கிறது என்பது  கேவலத்தின் உச்சம்.

சாலை நிர்மாணிப்பில் பணிபுரிகின்றவர்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது என்பதை உணர்த்தவறவவிட்டதின் விளைவுதான் சிலரின் உயிர்ப்பலிக்குக் காரணம்.

இதில்,  இழப்பு என்பது சாதாரணம் அல்ல. பொருளோ பணமோ இழப்பு அல்ல. சிலரின் உயிர் . இந்த உயிர் விளையாட்டில் அஜாக்கிரதை என்பது கடுகளவும் இருக்கக் கூடாது என்பதுதான் விதி, வீதி மீறவில்லை என்று சொல்வதற்குக் கடுகளவும்  வாய்ப்பே இல்லை

 

. பொய்களும் சமாளிப்புகளும் இதில் எடுபடாது. சில உயிர்ப்பலிகள் நேர்ந்திருக்கின்றன என்பதே அதை நிரூபித்துவிடும்.

சில ஆண்டுகள் வரை நீடிக்கும் சாலை சீரமைப்புப் பணிகளில் மிகமிகக் கவனம் இல்லாது போனால்,  சாலை மேம்பாட்டு குத்தைகையாளர்களை நீக்குவதே சரியான முடிவாக இருக்கும். அதுமட்டுமல்ல அதற்கு மேலும் நீதி தன் வேலையைச் செய்யும். 

சாலை மேம்பால பணிகளில் அக்கறையில்லாத பாதுகாப்புப் பிரிவே அனைத்திற்கும் பொறுப்பானவர்கள் என்பதால் உயிரழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. பொதுமக்களுக்கு இடையூரின்றி மாற்று வழித்தடத்தை உருவாக்கித்தருவதால் விபத்தை இல்லாமல் செய்துவிடலாம்.

 இதனைக் கடைப்பிடிக்காதவரை விபத்துகளைத்தவிர்க்க முடியாது. காரணங்களால் கண்ணீரைக் கட்டிப்போட முடியாது,  நிவர்த்தி செய்துவிடவும் முடியாது.

உயிர் இழப்பை ஈடுகட்ட எவராலும் முடியாது என்பதால் விபத்து நேராமல் பார்த்துக்கொள்வதே பாதுகாப்புப் பிரிவின் பணியாக இருக்க வேண்டும். அதே வேளை அப்பிரிவினர் இதுபோன்ற பணிகளுக்கு ஏற்புடைய அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை ஆராய்ந்தும், அல்லது பரிசோதிக்கும் பொறுப்பும் யாரிடம் இருக்கிறது என்பதும் கேள்வியாகவே நிற்கும். 

பொறுப்பானர்கள் பதில் சொல்லலாம். அவர்களால் முடியும் என்றாலும்  உயிர் இழந்தவர்களை மீட்டுத்தர முடியுமா? அவர்களின் குடும்பத்திற்கு என்ன பதி சொல்லப்போகிறாகள்?

  -கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here