பிரதமர் அதிகாரப்பூர்வ பயணமாக 2 நாள் புருனே சென்றடைந்தார்

பண்டார் ஶ்ரீ பகவான் : பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) புருனேக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக அங்கு சென்றடைந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இங்குள்ள புருனே அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்த அவரை பிரதமர் அலுவலகத்தில் மூத்த அமைச்சர் இளவரசர் ஹாஜி அல்-முக்தாதி பில்லா வரவேற்றார்.

அனைத்துலக விமான நிலையத்தில் பிரதமருக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு விழா வழங்கப்பட்டது. மலேசியாவின் தேசிய கீதம், நெகாரா கூ, தொடர்ந்து புருனே தாருஸ்ஸலாமின் தேசிய கீதம் அல்லாஹ் பெலிஹாரகன் சுல்தான் இசைக்கப்பட்டது.

முஹிடின் பின்னர் ராயல் புருனே ஆயுதப்படை இடத்தை பார்வையிட்டார். முஹிடினை வரவேற்க  புருனே அமைச்சரவையைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களும் அங்கு இருந்தனர். உள்துறை அமைச்சர் பெஹின் ஒராங் கயா ஶ்ரீ கெர்னா டத்தோ ஶ்ரீ செத்தியா (டாக்டர்) ஹாஜி அவாங் அபுபக்கர் அப்போங் ஆகியோர் ஆவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here