தனிநபர் தகவல்கள் முகநூலில் கசிவாம்!

 இணையத்தளங்களில்  ஹேக்கர்ஸ் அச்சம்

நியூயார்க்:

உலகம் முழுவதும் 50 கோடி பேஸ்புக் பயனாளர்களின் கணக்கு விவரங்கள் ஆன்லைனில் கசிந்திருக்கும் அதிர்ச்சி தகவல் அம்பலமாகி உள்ளது.

இஸ்ரேலின் சைபர் கிரைம் உளவு நிறுவனத்தின் துணை நிறுவனர் ஆலன் கால் என்பவர், பேஸ்புக் பயனாளர்கள் 50 கோடி பேரின் தகவல்கள் ஹேக்கர்கள் இணையதளங்களில் இலவசமாக கிடைப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த தகவல்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆன்லைனில் கிடைப்பதாக கூறியிருக்கும் அவர் அதுதொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் 61 லட்சம் பேரின் கணக்கு விவரங்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக் பயனாளர்களின் முழு பெயர் அவர்களின் மொபைல் எண், இமெயில் முகவரி, திருமணம் ஆனவரா இல்லையா என்பது போன்ற தனிப்பட்ட தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த தகவல்களை ஆலனும், பிசினஸ் இன்சைடர் நிறுவனமும் இணைந்து பரிசோதித்ததில் அவை உண்மையான தகவல் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பேஸ்புக் வழக்கம் போல் மறுத்துள்ளது.

‘தற்போது வெளியாயிருக்கும் தகவல்கள் பழையவை. இவை, 2019ம் ஆண்டிலேயே கசிந்ததாக கூறப்பட்டு, அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது,’ என அது கூறியுள்ளது. 50 கோடி பேரின் தகவல்கள் ஆன்லைனில் உலாவுவது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், தனிநபர் தகவலுக்கு பாதுகாப்பில்லாத உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here