–அமெரிக்க அரசு அறிவித்த போட்டி..!!
முகக் கவசத்தை விலை குறைவாகவும் அணிவதற்கு எளிமையாகவும் பாதுகாப்பாகவும் உருவாக்குபவர்களுக்கு பெரிய தொகை பரிசாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மாஸ்க் அணிய வேண்டும் என்பதை அரசுகளும் சுகாதார வல்லுநர்களும் ஊக்குவித்தும் முயற்சித்தும் வருகின்றனர்.
ஆனால் வெகுநேரமாக முக கவசத்தை அணிந்து கொண்டே இருப்பது மிகவும் கடினமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முக கவசம் அத்தியாவசிய பொருளாக மாறியதனால் விலை குறைவாகவும் பாதுகாப்பானதாகவும் அறிந்துகொள்வதற்கு எளிமையாகவும் இருக்குமாறு புதிய முக கவசத்தை தயாரிப்பவருக்கு பெரிய தொகை பரிசாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை 5 லட்சம் டாலர் எனவும் அமெரிக்காவில் வசிப்பவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க இயலும் எனவும் தெரிவித்துள்ளது.
இதில் கலந்துகொண்டு முதற்கட்ட போட்டியில் வெற்றி பெறும் 10 போட்டியாளர்களுக்கு தலா 10000 டாலர் வழங்கப்படும் எனவும் இரண்டாம் கட்ட போட்டியில் வெற்றி பெறும் ஐந்து போட்டியாளருக்கு 4 லட்சம் டாலர் சரிசமமாக பிரித்தளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப் போட்டிக்கான முகக்கவச டிசைன்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 21 என தெளிவாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.