செவ்வாய் கிரகத்தில் ஒரு செல்ஃபி

 ஹெலிகாப்டருடன் செல்ஃபி எடுத்த நாசா விண்கலம

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.

அந்த விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி (Ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல விதமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா தெரிவித்திருந்தது.

நாசா அனுப்பிய இந்த ஹெலிகாப்டர் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் இருந்து பிரிந்து, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி மனித குல வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தியது.

செவ்வாய் கிரகத்தில் (ஏப்ரல் 6, 2021) 46 ஆவது செவ்வாய் நாளில் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) முதல் செல்பி எடுத்து அனுப்பியுள்ளது .செவ்வாய் கிரக ஹெலிகாப்டர் இந்த படத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்திடம் இருந்து சுமார் 4 மீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

ரோவரின் ரோபோ கையில் அமைந்துள்ள ஷெர்லாக் (ராமன் அண்ட் லுமினென்சென்ஸ் ஃபார் ஆர்கானிக்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ்) (SHERLOC -Scanning Habitable Environments with Raman and Luminescence for Organics and Chemicals) கருவியின் ஒரு பகுதியான வாட்சன் (WATSON – Wide Angle Topographic Sensor for Operations and engineering)(செயல்பாடுகள் மற்றும் பொறியியலுக்கான பரந்த ஆங்கிள் டோபோகிராஃபிக் சென்சார்) கருவியின் மூலம் இந்த செல்பி படத்தை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here