இந்திய விமானத்தில் உணவு, பானங்களுக்கு கட்டுப்பாடு

-தூரத்தைப் பொறுத்து பாதுகாப்பான உணவு!
புதுடில்லி:
இந்தியாவில் இயங்கும் அரசு, தனியார் விமான சேவை நிறுவனங்களில் விமானத்தின் தூரத்தைப் பொறுத்தும், வாடிக்கையாளர் செலுத்தும் கட்டணத்தை பொருத்தும் உணவுகள், பானங்கள், டீ, காபி, தின்பண்டங்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
சர்வதேச விமானங்களில் மதுபானங்கள் உட்பட பலவித உணவுகள் வழங்கப்படும். அதேசமயம் உள்ளூர் விமானங்களில் குறைந்த அளவு உணவு வழங்கப்படும்.
இதற்காகவே கேட்டரிங் நிறுவனங்கள் பல, விமான நிலையங்களில் இயங்கிவருகின்றன.பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் அளவு டிக்கெட் கட்டணத்தை பொருத்து அமையும். அசைவ, சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு பயணத்தின்போது வழங்கப்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உணவின் தூய்மை கட்டுப்பாடுகள் மத்திய அரசால் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள சூழ்நிலையில் விமான பயணத்தின்போது அங்கே அளிக்கப்படும் உணவை அருந்த யாரும் விரும்புவதில்லை.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்த நிலை கடந்த ஓராண்டாக நீடித்து வருகிறது.இந்நிலையில் மத்திய அரசு வரும் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் இந்திய விமான சேவை நிறுவனங்களுக்கு உணவு அளிப்பதில் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இரண்டு மணிநேரத்துக்கு குறைவான பயண தூரம் கொண்ட விமானங்களில் இனி உணவுகள் வழங்கப்படமாட்டாது என்று விமான கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில் 120 நிமிடங்களுக்கு மேற்பட்ட பயண தூரம் உள்ள விமானங்களில் உணவுகள் வழங்கப்படும்.இதேபோல குளிர்பானங்கள், மது வகைகள் ஆகியவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன.
டீ, காபி, மது பானங்கள், குளிர்பானங்கள் ஆகியவை ஒருமுறை மட்டுமே பயன்படக்கூடிய டின்களில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இதனால் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு பயணத்துக்கு முன்னரும் விமானத்தை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பேப்பர், பிளாஸ்டிக் குப்பைகளை தனியார் விமான நிறுவனங்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை அனைத்து தனியார் விமான சேவை நிறுவனங்களும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here