அதிவேகமாக பரவிவரும் கொரோனா

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

உலகில்   கொரோனா பரவல் அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலின் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான்கெர்கோவ்நாம் இப்போது தொற்றுநோயின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றானது அதிவேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பொது சுகாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட குழப்பம், அலட்சியம் போன்றவை கொரோனா உயிரிழப்புகளை அதிகரிக்கக் காரணமாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் இதுவரை 13 கோடியே 73 லட்சத்து 40 ஆயிரத்து 198 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கமெண்ட் : வேகமாக ஓட வேண்டிய நேரத்தில் பொறுமையாக இருக்க முடியாது. இப்போது நடப்பது உயிர் காக்கும் ஓட்டம். ஓடித்தான் ஆகவேண்டும். அப்பாவி மக்களைக் காப்பாற்ற அரசாங்கங்கள் பிரதிபலன் பாராமல் உழைக்க வேண்டும்.

நாடுககள்   தங்கள் உள் பிரச்சினைகளையும் எல்லை மீறல்,  திருடும் யோசனைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் சுயநலமில்லாமல் உதவிக்கொள்ளை முன் வரவேண்டும் . இந்த சிந்தனை ஓட்டம் வேகமாக செயல்படவேண்டும்.

இப்படிச்செய்தால் நாடு, இல்லையேல் சுடுகாடு. அதனால் விரைந்து ஓடு. சுதாதாரத்தைத் தேடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here