விஜய்க்கு வைத்துளேன் -கே எஸ் ரவிக்குமார் .
விஜய்(vijay)யின் தற்போதைய சினிமா வளர்ச்சி உச்சத்தில் உள்ளது. கடந்த பத்து வருடத்தில் மட்டும் விஜய் மார்க்கெட் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் விரிவடைந்துள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் இயக்கிவரும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுப்பதாக விஜய் உறுதி கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தினமும் ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ் சினிமாவின் பக்கா கமர்சியல் இயக்குநராகவும் மினிமம் கேரண்டி இயக்குநராகவும் நீண்ட நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கும் கேஎஸ் ரவிக்குமார் விஜய்க்காக ஒரு கதை வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கேஎஸ் ரவிக்குமார் , ரஜினி கூட்டணி அபார வெற்றி கூட்டணி தான். அதுவும் அவர்களது கூட்டணியில் வெளிவந்த படையப்பா திரைப்படம் பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்தது. இந்நிலையில் படையப்பா படத்தையே மிஞ்சும் அளவிற்கு ஓரு சூப்பர் கதை ஒன்று விஜய்க்கு வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மட்டும் ஓகே சொன்னால் நாளைக்கே சூட்டிங் தான் என கே எஸ் ரவிக்குமார் கூறியுள்ளது தளபதி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இருந்தாலும் இளம் இயக்குநர்களை நம்பி வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் விஜய், மூத்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்பது சந்தேகம்தான். விஜய் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் மின்சார கண்ணா என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.