அலசல்
–எல்லாமே அரசியல்தான்யா…!
எந்த செய்தியாகட்டும் எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் என்பது வழிவழி வரலாறு. உலகத்தில் எந்த செய்தியை எடுத்துக்கொண்டாலும் அச்செய்தியின் பின் விளைவுகள் தேய்ந்துபோனதாகத்தான் இருக்கும்.
நாட்டின் கொரோனா செய்தியும் அப்படித்தான். கடந்த ஆண்டில் தொடங்கிய ஆர்ப்பாட்டம் இப்போது இல்லை . இதற்கு வரவர மாமியார் கழுதைபோல் ஆனார் என்றும் உதாரணம் கூறுவதுண்டு. இது மட்டுமல்ல இன்னும் நிறைய பழமொழிகள் இதுபோல உண்டு.
அன்றைய தீவிர கட்டுப்பாடுகள் தொடரப்பட்டிருக்குமானால் இன்றைய தொற்று 2195 ஆகியிருக்காது. இது ஒன்றே போதும் நாம் இன்னும் அசட்டையிலும் பலவீனத்திலும் இருக்கிறோம் என்பதற்குச் சான்றாக.
ஊர்மக்கள் ஒன்று கூடி தேர் இழுத்தால் தான் தேர் ஊர்ப்போய்ச் சேரும். இடையில் முன்னும் பின்னும் இழுபறி என்றால் காலம் பிடிக்கும். அதுபோலத்தான்ன் இன்றைய கொரோனா தடுப்பு முயற்சிகளும் இருக்கின்றன.
சுகாதாரத்துறையின் அதீத முயற்சிகள் மதிக்கப்படுவதில்லை என்பதாகவே இன்றைய நிலை இருக்கிறது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ஏதும் நடக்காது. இரண்டில் ஒன்றை இழந்துதான் ஆகவேண்டும். எதை இழந்தால் நன்மை கிடைக்குமோ அதை இழப்பதில் குடி மூழ்கிவிடாது.
வலிக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் காலம் இப்போது என்பார்கள். வலி என்பது ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம். வலிமையை உணர வலி அவசியம் தேவை என்பது மகான்களுக்குத் தெரியும். நல்ல மகன்களுக்கும் தெரியும். வலிக்காமல் பெற்றுக்கொள்ளத்தன் விருப்புகிறார்கள். வலி மை இல்லாதவர்களுக்கு இது தெரிய நியாயமில்லை.
சில நல்லவற்றைக் கடைப்பிடிக்கும்போது கடினமாக இருக்கும். வலியும் கூட ஏற்படும். கடினமென்றாலே வலிதானே. அதைப் பழகிக்கொண்டால் வலிதெரியாது. பின்னர் அதன் வலிமை தெரியும்.
நாம் பழகிக்கொள்ள முயற்சிப்பதில்லை. கூடல் இடைவெளி, முகக்கவசம் என்றால் நடமாட்டக்கட்டுப்பாட்டு நடைமுறையை ஒழுக்கத்தோடு கையாண்டால் தானே தொற்று தோல்வியடையும்.
நம்மிடம் ஒழுக்க மில்லை. கட்டுப்படும் எண்ணமும் இல்லை. மீறல் மட்டுமே நமது கொள்கை என்றால் கொரோனாவும் கட்டுப்படாதே!
அதிகரிக்கிறது கோரோனா. தொடங்கிய இடத்திற்கே திரும்பிவிட்டோம் என்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார். இது பொதுவான சாடல் என்றாலும் இதுதானே உண்மை.
இந்த உண்மைக்குபின்னால் அரசியல் இருப்பதை மோப்பம் பிடிக்காமல் இருப்பார்களா? அரசியைப்பற்றி இருவர் பேசினால் அது அரசியல். கோழி விலை கிலோ ஒன்றுக்கு 12 வெள்ளி என்பதும் வெங்காயம் விலையேற்றம் என்பதும் பக்கா அரசியல்தான். அரசியல் இல்லாமல் வாழ்க்கையைத் தனித்துப்பார்க்க முடியாது அல்லவா? ஆனால், அரசியில் கல் என்றால் ஒதுக்குவது தானே அறிவுடைய செயல். அதை ஏன் செய்யமுடியவில்லை.
நிச்சயம் முடியாது. நட்டளும்னறம் கூட்டப்படவில்லை. காரணம் கொரோனா, பாசார் மாலாம் கூடலாம், விடியும் வரை உணவருந்தலாம் இதுவும் அரசியல்தான். ஆனால் பாவம் கோரோனா. அரசியல் தெரியாமல் அல்லாடுகிறது. கோரோனாவை பொறுத்தவரை அதற்கு அனைவரும் ஒன்றுதான்.
அரசியலுக்குத் தன்னைப் பயன்படுத்துக்கிறார்கள் என்பதைக்கூட புரிந்துகொள்ளாமல் அரசியலில் சிக்கிக்கொண்டிருக்கிறதே!
அதைத்தான் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாசூக்காகக் கூறுகிறார். இன்று கோவிட் எந்த அளவில் இருக்கிறது என்பது அன்றாட எண்கணிதம் ஆகிவிட்டது. நான்கு நம்பர் எடுக்கின்றவர்களுக்கு இலவச நான்கு எண் கிடைக்கிறது. ஆனால் இந்த எண்ணிக்கையின் ஆழத்த் கேள்வி எழுப்பினால் பேரரசியல் ஆக்கிவிடுகிறது.
இப்போதெல்லாம் ஒரு செயலைத்தடுப்பதற்கு ஆயுதம் தேவையில்லை. அரசியல் மூளையை ஒரு மூலையில் இருந்து எடுத்து பயன்படுத்தினாலே போதும்.
அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்காகவே அவசரகாலப் பிரகடனம் என்கிறார் அன்வார். இக்கூற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள நேரமாகாது. எல்லாம் புரிந்துகொள்வதில் தானே இருக்கிறது!
அப்படியெல்லாம் எங்களை எடைபோட்டுவிடவேண்டாம் என்று குரல்கள் ஒலிப்பதையும் கேட்க முடிக்கிறது.
ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றைகட்டி இறைப்பார்களா? ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பார்களே! அதுதான் இது. கொரோனா நல்ல பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறது. என்றால் கேப்பையில் நெய்வடிகிறது என்று கூறுவதா என்றும் கேட்கலாம். கேட்பவர்களின் பேச்சு உரிமைக்குத் தடையில்லை. ஆனால், யோசியுங்கள் என்றால் கோபப்படுவானேன்.
இப்படிச்சொல்வதற்கு உரிமை அதிகமாகவே இருக்கிறது. காரணம் , முட்டைபோடும் கோழிக்குத்தானே தெரியும் வலி!
இழுத்தடித்தல் செய்வதற்கு ஒரு காரணம் வேண்டும். அதுதான் கொரோனா. அப்படியிருந்தால் அதிஷ்ட எண் எப்படி வெற்றிபெறும். அது கள்ள எண்கள் என்கிறார் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
இந்த கள்ள எண்களுக்கு தடுப்பூசி போடப்படவேண்டும் என்பதுதான் இன்றைய செய்தி. இது நல்ல செய்தியா அல்லது……..!
அட போங்கப்பா. கலியிலேயே வாய கிளறுரீங்களே ! ஆங் கோவிட் தொற்று 2195 தானே! சொன்னாலே வலிக்குதே!
-கா.இளமணி