குடிபோதையில் வாகனமோட்டி விபத்தை ஏற்படுத்திய ஆடவர் கைது

மலாக்கா:  கிளெபாங்கில் சாலையோர கடையை நேற்று மோதிய 47 வயது டிரைவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது   கண்டுபிடிக்கப்பட்டது.

மலாக்கா தெங்கா ஒ.சி.பி.டி உதவி ஆணையர் அஃப்ஸானிசர் அஹ்மட் கூறுகையில், வாகனமோட்டி கிளந்தானை சேர்ந்தவர் மற்றும் சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாதவர். நேற்று மாலை ஸ்டாலுக்குள் நுழைவதற்கு முன்பு தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள ஜாலான் லிம்பொங்கனுடன் சாலையோர கடையில் நோன்பை துறப்புதற்காக உணவுகளை மூவரும் தயாரித்துக் கொண்டிருந்தனர்.

காயமடைந்தவர் கம்போங் லிம்போங்கன், கிளெபாங் கிச்சில் பகுதியைச் சேர்ந்த 57 வயதான நோராஸிசா ஜெனல் என ஏ.சி.பி அப்சானிசர் அடையாளம் காட்டினார். வலது தோள்பட்டை, வயிற்றில் காயமடைந்த அவரது மகள் நூருல் ஆயு உமைரா சம்சுதீன் 15, மற்றும் அவரது 13 வயது மகன் முஹம்மது அலிஃப் ஹாஸிமி சம்சுதீனுக்கு அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது.

மூவரும் தற்போது மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் ஸ்டாலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது என்று தி ஸ்டார் திங்களன்று (ஏப்ரல் 19) தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

சம்பவம் நடந்த உடனேயே நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையின் போது ஓட்டுநர் ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் உட்கொண்டது தெரிய வந்துள்ளது என்று ஏ.சி.பி. அப்சானிசார் தெரிவித்தார்.

சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 ன் கீழ் இந்த சம்பவம் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர் என்றார். அந்த நபர் இன்று  ஆயர் கெரோ நீதிமன்றத்திற்கு  அழைத்து வந்து தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here