சின்ன கலைவாணர் இறந்த நாள்

 

மரம் நடும் நாளாக அறிவிக்கலாமே!

ராஜ மரியாதை என்பது மரியாதைக்குரிய உச்சத்தைக் காட்டும் சொல்லாக அமைந்திருக்கிறது.

அரசரைத் தவிர்த்து இந்தச்சொல் பல சூழ்நிலைகளில் உச்சரிக்கப்படுகிறது. அதாவது மரியாதைக்கான உச்ச சொல்லாகவே இச்சொல் கையாளப்படுகிறது. அப்படிப் பார்க்கும்போது இச்சொல்லுக்கு இயல்பாகவே மரியாதை கிடைத்துவிடுகிறது என்றாலும் மறுத்துப்பேச வார்த்தையில்லை.

மரியாதைக்குரிய என்று சொல்லும்போதே அவ்வார்த்தைக்கான மனிதர் பற்றியும் சிந்திக்கலாம், அந்த சிந்தனையில்  இன்றைய பேச்சாக இருப்பது சின்ன கலைவாணர் விவேக் என்பது சரியானதுதானே!

சினிமாவில் மரியாதை என்பது அத்துணைச் சுலபமாக வந்துவிடாது, கிடைப்பதாகவும் இருக்காது. அப்படிக் கிடைத்தவர்கள் மரியாதைக்குரியவர்களாக வாழ்ந்தார்கள் . வாழ்ந்து மறைந்தார்கள். இன்னும் சிலர் வாழ்கிறார்கள்.

சில தினங்களுக்குமுன் வரை மரியாதைக்குரிய மனிதராக வாழ்ந்து மறைந்த  சின்ன கலைவாணர் நடிகர் விவேக் சினிமாவில் நடித்திருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் நடிக்காதவர். அதனால் அவருக்கான் மரியாதை உரியவர் இன்றி தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறதே! அவரோடு சேர்ந்தே வாழ்ந்த மரியாதை உரியவர் இன்றி விசும்பிக்கோண்டிருக்கிறது.  மரியாதை தனித்துவிடப்பட்டிருப்பதை பலர் கண்ணீரோடு நினைத்துப்பார்கின்றனர்.

பொதுவாகவே ஒரு கலைஞன் தன் வேடத்தைக் களைந்ததும் அவன் மாற்று மனிதனாகிவிடுகிறான். அதாவது, சுய உண்மைக்கு வந்துவிடுகிறான். அப்போது கலை வேறு ,அவன் வேறாகி நிற்பதை உணரமுடியும். அப்போது மரியாதையோ ராஜமரியாதையோ அவனை விட்டு  ஒதுங்கித்தான் நிற்கும்.

அதே மனிதன் கலையோடும், கலையை மக்களோடும் , நாட்டுக்காகவும் ,பொதுமைக்காகவும் பயன்படுத்தியவனாக இருந்தால் அவனின் மரியாதை ராஜ மரியாதை ஆ(க்)கிவிடுககிறது. 

இதை தனது வாழ்நாளில் நிரூபித்திருக்கிறார் சின்ன கலைவாணர் விவேக். தமிழ் நாட்டு காவல்துறையினரே மரியாதை செலுத்தி அவரை மிகுந்த மரியாதைக்குரியவாராக மாற்றியிருக்கிறது. 

மக்களை எழுச்சியுற , விழிப்புணர்வூட்ட, மக்களுக்கு உயிர்க்காற்றைத்தரும் மரம் நடுதலை ஊக்குவித்ததும் மக்கள் சொல்ல நினைத்தது இதுதான் -WE WAKE-

அரசியலில் மிக உயர்ந்தவர்களுக்குக்கிடைக்கும் மரியாதைக்குரிய மனிதாராக விவேக் திகழ்கிறார் என்பதை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் செய்தி காட்டியிருக்கிறது.

மரியாதைக்குரிய மனிதர் என்பதை செயலால் நிரூபித்த மாநில, மத்திய அரசு , காவல்துறையை போற்றாமல் இருக்க முடியாது.

வெறும் நகைச்சுவை மட்டுமே வாழ்க்கை இல்லை. வாழ்க்கைக்கு அர்த்தம் பொதிந்த நகைச்சுவை வேண்டும். அது இப்புபொருளாக அல்லாமல் தேனாக கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.

மக்கள் இல்லாமல் நகைச்சுவைய யார்தான் ரசிக்க முடியும்? முதலில் மக்களுக்குக் கொடுக்கப்படுவதை, சார்ந்த தொழில்வழி கொடுக்க முயற்சித்திருக்கும் சின்ன கலைவாணர் வெற்றியடைந்திருக்கிறார். அதனால் விவேக் தமிழகத்திற்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல. கடல்கடந்தும் உறவாகியிருக்கிறார்.

ஒவ்வொரு கலைஞனுக்கும்  இவர் உடன்பிறப்பாய் ஆகிவிட்டதை உணரமுடிகிறது, ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அனுதாபச் செய்திகள். மலேசியாவிலிருந்தும் நட்பாக அனுதாபச் செய்திகள் கூறப்பட்டிருக்கின்றன.

மலேசியாவின் முக்கிய அரசியல் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார் என்பது சின்ன கலைவாணரின் பொதுமைச் சிந்தனையாகத்தான் இருக்க முடியும். 3.3 லட்சம் மரங்களுக்கு விளைச்சல் கொடுத்திருக்கிறார் விவேக் என்பது சாதாரண காரியமல்ல.

அப்துல் கலாம் காலத்தில் அவரைப் பற்றிச்சிந்திதிருக்- கலாம், சந்திக்  –கலாம், புகழ்ந்திருக் கலாம் என்று நினைத்தவர்களும் உண்டு. ஆனால் முடிந்ததா? அவரைச் சந்திப்பதும் சந்தித்ததும் மரியாதைக்குரியது. அந்த வாய்ப்பு சின்ன கலைவாணருக்குக் கிடைத்திருக்கிறது. 

அதனால், அவரின் மரியாதை பல மடங்கு உயர்ந்து, அவரை மரியாதைக் குரியவராக்கியது. அதாவது பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும் என்பதுபோல.

அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று நம்மோடு  இல்லை. அனாலும் அவர் நம்மோடு வாழ்கிறார்,வாழ்வதும் உண்மை. நட்ட மரங்களில் காற்று மோதும்ம்போதெல்லாம் இனி விவெக் என்றுதான் சொல்லும், அதை உணரமுடியும்!

அவர் புகழ் நிலைத்திருக்க, சின்ன கலைவாணரின் நினைவுகள் தொடர்ந்துவர, அவரின் இறந்த நாளை மரம் நடும் நாளாக அறிவிக்-கலாம் . முன்னாள் ஜனாதிபதியின் ஆசி நிச்சயம் கிட்டும். இது அவருக்குச் செய்யும் மரியாதையாகும்.

 

 

-கா.இளமணி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here