பட்டர்வொர்த்: பினாங்கு பாலத்தில் மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி கம்பத்தில் மோதியதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.
நேற்று மாலை நடந்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து, கம்பத்தில் மோதியதில் பாதிக்கப்பட்ட, முஹம்மது ஹைக்கல் ஷாஃபிக் அப்துல் ரஹீம் 31, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று மத்திய செபராங் பிறை ஒ.சி.பி.டி உதவி ஆணையர் ஷாஃபி அப்துத் சமத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் பிறையில் இருந்து தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் கோல முடா மாவட்ட போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்தவராவார்.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக ஒரு மருத்துவ அதிகாரியால் அறிவிக்கப்பட்டதாக ஏ.சி.பி ஷாஃபி தெரிவித்தார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றார்.