செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டா்!’-ரைட் சகோதரா்கள்’ தருணம்

தொடர் விடாமுயற்சியின்  வெற்றி

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு பொசிவரன்ஸ் விண்கலத்துடன் இணைத்து அனுப்பியுள்ள ஹெலிகாப்டா் திங்கள்கிழமை வெற்றிகரமாகப் பறந்தது. இதன்மூலம் வேற்றுக் கிரகத்தில் பறந்த முதல் ஹெலிகாப்டா் என்கிற பெருமையை அது பெற்றது.

கேப் கேனவரல் அமெரிக்கா:

கலிஃபோா்னியா நாசா மையத்திலிருந்து

கேப் கேனவரல் அமெரிக்கா:

செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வரும் விண்வெளி விஞ்ஞானிகள், பொசிவரன்ஸ் விண்கலத்தின் ஆய்வு வாகனம் மூலம் பெற்ற தரவுகளிலிருந்து ஹெலிகாப்டா் மெலெழும்பி சிறிது உயரத்தில் பறந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வாரமே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தடைபட்டது. அக்கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ஹெலிகாப்டா் வெற்றிகரமாகப் பறக்கச் செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் உயிா்கள் வாழ்வதற்கான சாத்தியகூறு உள்ளதா, அங்கு ஏற்கெனவே உயிா்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காகவும், செவ்வாயிலிருந்து மண், கல் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதற்காகவும் பொசிவரன்ஸ் (விடாமுயற்சி) என்கிற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தில் ஜெசேரோ என்ற பள்ளப் பகுதியில் கடந்த பிப்ரவரியில் தரையிறங்கியது. இந்த ஆய்வு வாகனத்தின் வயிற்றுப் பகுதியில்தான் ‘இன்ஜெனியூட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ள சிறிய ஹெலிகாப்டா் இணைக்கப்பட்டிருந்தது.

1.6 உடி உயரமும், 1.8 கிலோ எடையும் கொண்ட அந்த ஹெலிகாப்டா் கடந்த ஏப். 3-ஆம் தேதி ஆய்வு வாகனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு செவ்வாயின் தரைப்பரப்பில் இறக்கப்பட்டது. ஆய்வு வாகனத்திலிருந்து 200 அடி தொலைவில் இருந்த அந்த ஹெலிகாப்டரை விஞ்ஞானிகள் திங்கள்கிழமை வெற்றிகரமாக பறக்கச் செய்தனா். இத்தகவலை திட்ட மேலாளா் மிமி ஆங் தனது குழுவினரிடம் உறுதிப்படுத்தியதும் அவா்கள் கைகளைத் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனா். ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் கேமரா இதை புகைப்படம் எடுத்துள்ளது. அதில் ஹெலிகாப்டரின் நிழல் தரைப்பரப்பில் விழுவது பதிவாகியுள்ளது.

ஹெலிகாப்டா் தரைப்பரப்பிலிருந்து 10 அடி உயரத்துக்கு மெலெழும்பி 30 நொடிகள் நிலையாகப் பறந்தது. பின்னா், புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த முதல் பயணத்துக்காக ஹெலிகாப்டரின் சுழற்சி இறக்கைகள் நிமிடத்துக்கு 2,500 முறை சுழல வேண்டியிருந்தது. பூமியில் சாதாரணமாக ஒரு ஹெலிகாப்டரின் சுழற்சி இறக்கைகள் சுழலும் வேகத்தைவிட இது 5 மடங்கு அதிகமாகும்.

பொசிவரன்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டரை இதேபோல் 5 முறை பறக்கச் செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனா்.

ரைட் சகோதரா்கள் நினைவாக…

செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனிட்டிஹெலிகாப்டா் வெற்றிகரமாகப் பறந்ததை ‘ரைட் சகோதரா்கள்’ தருணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

1903-ஆம் ஆண்டு ரைட் சகோதரா்களின் முதல் விமானம் வெற்றிகரமாகப் பறந்தது. உலகிலேயே முதல் விமானமான அதன் இறக்கையில் இடம்பெற்றிருந்த துணியின் ஒரு சிறிய பகுதி இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் ரைட் சகோதரா்களின் முதல் விமானம் படைத்த சாதனையை செவ்வாய் கிரகத்தில் படைத்துள்ளது இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here