–குழந்தைகள் சமாளிக்கும் வழி வகைகள்
பெரும்பாலான பெற்றோர்கள் வைரஸ் தொற்று பரவலில் இருந்து குடும்பத்தை பாதுகாக்கும் முயற்சிகளிலே அதிகம் ஈடுபடுவதால், குழந்தைகளின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வதில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.
வாழ்க்கை முறை மாற்றத்தால் உருவான மனஅழுத்தம் குழந்தை களின் நடத்தையில் பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. அதில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கு,
* குழந்தைகளிடையே நிலவும் கொரோனா பற்றிய அச்சத்தை தீர்க்க பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அதனை பற்றி தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் பெற்றோர் குழந்தைகளிடம் பேச வேண்டும்.
* வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் குழந்தைகளை அவர் களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு அனுமதிக்கலாம். வீடு குப்பையாகிவிடுமே என்று கவலைப்படாமல் அவர்களை மகிழ்ச்சியாக செயல்படவிடுங்கள்.
* உள்அறை விளையாட்டு, ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தலாம். குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து குழந்தைகளுக்கு பிடித்தமான எளிய விளையாட்டுகளை விளையாடலாம்.
* பெற்றோரின் மேற்பார்வையில் டிஜிட்டல் தளங்கள் வழியாக நண்பர்கள் வகுப்பு தோழர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு ஊக்குவிக்கலாம். ஆன்லைன் வழியாக வாரம் ஒருமுறை நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பது அவர்களது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
* குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் ‘கொரோனா பாதிப்பாக இருக்குமோ?’ என்று பீதி அடையாதீர்கள். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பானதுதான்.
* 18 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 8.5 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.