இதுவும் கடந்து போகுமா?

3 ஆயிரத்தைக் கடந்த
கோவிட்-19 சம்பவங்கள்

புத்ராஜெயா- 
நாட்டில் தினங்ரி பதிவாகும் கோவிட்-19 வைரஸ் தொற்று எண்ணிக்கை பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேற்று நாட்டில் கோவிட்-19 வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 3,142ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றுப் பதிவான சம்பவங்களுள் 3,129 சம்பவங்கள் உள்நாட்டில் ஏற்பட்டவையாகும். இதர 13 சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களை உட்படுத்தியவையாகும்.

குறிப்பாக சிலாங்கூரில் மட்டுமே 1,019 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனை அடுத்து கிளாந்தான் 523, கோலாலம்பூர் 440, சரவாக் 416, ஜோகூர் 194, கெடா 120, பினாங்கு 98, சபா 87, பேராக் 69, நெகிரி செம்பிலான் 61, மலாக்கா 42, திரெங்கானு 40, பகாங் 15, புத்ராஜெயா 13, லாபுவான் 4, பெர்லிஸ் 1 சம்பவம் என பதிவு ஙெ்ய்யப்பட்டுள்ளன.

நேற்றைய எண்ணிக்கையோடு சேர்த்து நாட்டில் இதுவரை மொத்தமாக 401,593 பேருக்கு இத்தொற்று கண்டிருக்கிறது.

கோவிட்-19 தொற்றின் காரணமாக நாட்டில் நேற்று மேலும் 15 பேர் மரணமடைந்தனர். இதன் வாயிலாக நாட்டில் இத்தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களுள் 1,822 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இதன்வழி குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 373,397ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே தற்போது நாடு தழுவிய அளவில் உள்ள மருத்துவமனைகளில் மொத்தமாக 26,719 பேர் இந்தப் பெருந்தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுள் 306 பேருக்கு அவசரப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. அதிலும் 151 பேருக்கு சுவாசக் கவசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here