சுற்றுச்சுழலியலின் தாய்!

இல்லம்சார் சுற்றுச்சுழலியலின் தாய் என போற்றப்படுபவர், எலன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்.

நகர சுகாதாரத்தில், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்.உலகின் முதல் பாதாள சாக்கடை திட்டத்தை முன்மொழிந்தவர்.கழிவு அகற்றும் பொறியியல் என்ற புதிய துறைக்கு வித்திட்டவர்.இல்லம் சார்ந்த சுழலியலை அறிமுகம் செய்தவர்.

அமெரிக்கா ,மாசசெடஸ் மாகாணத்தில் டன்ஸ்டேபிள் புறநகர் பகுதியில் பன்னிகல்ட் டெய்லர்,கணவர் பீட்டர் ஸ்வாலோவுடன் வாழ்ந்தார்.

இருவரும் ஆசிரியர்களாக பணிபுரிந்தனர்.பலசரக்கு கடையும், சிறிய விவசாய பண்ணையும் சொந்தமாக இருந்தன. இவர்களுக்கு, டிச.3. 1842 இல் பிறந்தார் எலன்.

கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியரானார் எலன். ஓய்வு நேரத்தில்,நர்ஸ்,கடையில் எடுபிடி, சமையல் உதவியாளர் என பல பணிகளை செய்து, மேற்படிப்பிற்கு பணம் சேர்த்தார். வானவியலும் வேதியியலும் கற்றார்.

எம்.ஐ.டி., என்ற மாசசெடஸ் தொழில்நுட்ப கல்வியகத்தில், முதல் பெண் பொறியாளராக பதிவு செய்து, உயராய்க்கு சேர்ந்தார். அப்போது,ஸ்வாலோ ஆய்வு என்றே அது அழைக்கப்பட்டது. அதற்கு காரணம் இருந்தது. ஒரு பெண் பொறியாளர் ஆக முடியுமா என அவரை வைத்தே ஆய்வும் செய்தது அந்த கல்வி நிறுவனம்!

கள ஆய்வுகள் செய்து,கட்டுரை சமர்ப்பித்து, பட்டம் பெற்ற அமெரிக்காவின் முதல் பெண் என்ற புகழ் பெற்றார் இவர். தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு, வனடியம் என்ற உலோகத்தை, இரும்புத்தாதிலிருந்து தனித்தெடுத்தார். இருந்தும்,அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படவில்லை.

பெண்களுக்கு அப்பட்டத்தை வழங்க அமெரிக்காவில் தடை இருந்தது.
இந்த தடை, மே 11,1876இல் அகற்றப்பட்டது. அதே ஆண்டு,எம்.ஐ.டி.,அரங்க பொறியியல் துறை தலைமை விரிவுரையாளர் ராபர்ட் ஹாலோ வெல் ரிச்ங்ர்ட்ஸ் என்பவரை மணந்தார் எலன்.

பின் அவரது திறமைகள் பளிச்சிட்டன. எம்.ஐ.டி.,பெண் களுக்கான ஆய்வகத்தை  1876 இல் ஏற்படுத்தியது. அதில் வேதிப் பகுப்பாய்வியல்,தொழில் வேதியியல் ,  உயிர் வேதியியல் என, புதிய துறைகளை தோற்றுவித்தார் எலன்.

அடுத்த ஆண்டே,கழிவு அகற்றும் வேதியியல் என்ற துறையை அறிமுகப்படுத்தினார். தொழிற்புரட்சி ஏற்பட்டபோது, நச்சுப்புகையும் நீர்மக்கழிவும் அதிகரித்தன.

அவற்றை அகற்ற வேண்டிய முறையை முன்மொழிந்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.அவர் எழுதிய, தி கெமிஸ்ட்ரி ஆப் கருவூலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here