ஏன் இந்த வன்மம் ? எதற்கு இந்த இழுத்தடிப்பு?

தாய்மையின் தவிப்பு மதிக்கப்படவில்லையே!

பதவி ஓய்வு பெறுகின்ற நேரத்தில் பாலர்ப்பள்ளி ஆசிரியர் எம் .இந்திராகாந்தி குறித்து வாய் திறந்திருப்பது குழந்தைகளுக்குக் கூறும்  கதைபோல் இருக்கிறது.

மலேசிய போலீசார் மிகுந்த திறமைசாலிகள் என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனால் பாலர்ப்பள்ளி அசிரியை விசயத்தில் போதிய அக்கறை காட்டப்படவில்லை என்பதாகவே பொதுக்கணிப்பாக இருக்கிறது.

தன் குழந்தையை மீட்பத்ர்கு போராடிவரும் இந்திராகாந்தியின் முயற்சியை குற்றமாகக் கணிப்பதுபோலவே ஓய்வு பெற்ருசேல்லும் தேசிய போலீஸ் படைத்தலைவர்  டான்ஶ்ரீ அப்துல் ஹமீட் பாடோர் கூற்றும் இருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது .

உண்மையிலேயே முழு அக்கறையுடன், ஒரு தாயின் இழப்பை பெரிதாக மதித்திருந்தால் நானயத்தை சுண்டிவிடும் நேரத்தில் அக்குழந்தையை மீட்டிருக்கலாம்.  இது போலீசாரின் இயலாமை என்றும் சுட்டுவிரல் நீட்டவும் தாயாரில்லை. மீட்பதற்குக்குக் கூறப்படும் சப்பைக்கட்டுகள் அத்துணை பலம் வாய்ந்தாக இல்லை என்பதில்தான் வருத்தம் அதிகம்.

ஒரு சாதாராண தாயின் முயற்சி களங்கப்படுவதுபோலவே பதிலலளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய போலீஸ் படைத்தலைவர் தம் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி குழந்தையை மீட்டுக்கொடுத்துவிட்டு விடைபெற்றிருந்தால் பெரிய சலாம் போட்டிருக்கலாம். அவர் கூறிய தேவையற்ற தலையீடுகள் என்ற பதிவு பொருத்தமானதாக இருந்திருக்கும்,

இந்திராகாந்தியின் இடைவிடாத முயற்சி ஒரு தாய்மையின் அவசரமாகும்.   ஒருதாயின் வேதனையை போலீஸ் துறையின் தேடுதல் முயற்சியோடு ஒப்பிடவே முடியாது. தன் குழந்தையைத்தேடும் முயற்சியில் அவரின் தீவீர்ம் கறைபடவில்லை. அந்த வேதனை அவருக்கு மட்டுமே ஆனதல்ல. அனைத்து தாய்மார்களுக்குமானது. 

பதவி ஓய்வு பெறும் நேரத்தில் வால் மட்டுமே நுழைந்திருக்கிறது என்ற சிறுவர் கதை இப்போது எடுபடாது . அக்கதையை விரல் சூப்பும் குழந்தைகள் கூட நம்ப மாட்டார்களளே!.

இந்த வேளையில். தேசிய போலீஸ் படைக்கு டான்ஶ்ரீ அக்ரில் அப்துல்லா சானி 13 ஆவது தலைவராக பொறுப்பேற்கவிருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி.

அவரை மதிப்போடு வரவேற்கும் பொறுப்பும் மலேசியர்களுக்கு இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பெல்லாம்  நீதியும் ஊழலற்ற நேர்மையும் தானே!

போலீஸ் காவலில்  அதிகமாக இந்தியர்கள் மடிவது ஏன்? இன்னும் இதற்கு போதிய விளக்கம் கிடைக்கவில்லை. இப்பட்டியலில் கணபதிக்கு நியாயம் கிடக்குமா என்பதும் மக்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

ஓர் இனத்தின் மீது அப்படியென்ன வன்மம் தலைதூக்கி நிற்கிறதோ?

 

—யங்பெல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here