பொருத்தமாக தொழிலாளர்களாக இருப்பதற்கு தொழிலாளர் சட்டம் தொடர்ந்து மறுஆய்வு

-தொழிலாளர் அமைச்சின் விவேகமான தூர நோக்கு

கோலாலம்பூர்-
நாட்டின் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் தேவைகளுக்குப் பொருத்தமானதாகவும் சரியானதாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கு அதன் நடப்பு சாராம்சங்களை மனிதவள அமைச்சு தொடர்ந்து மறுஆய்வு செய்துவரும்.

தொழிலாளர் நலன், பாதுகாப்புபு சுகாதார உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்படும் என்பது உறுதிசெய்யப்படும் வகையில் நடப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாட்டில் தொழிலாளர் சட்டம் பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் இருப்பதை தெளிவுபடுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது .

நாட்டின் பொருளாதார மீட்சிக்கு அடித்தளமாக விளங்கிவரும் தொழிலாளர்களின் பங்களிப்பை அரசாங்கம் மதிக்கிறது, அங்கீகரிக்கிறது என்று 2021 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஆர்டிஎம் வழி நேற்று நேரலை செய்யப்பட்ட உரையில் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இவ்வாறு குறிப்பிட்டார்.

உலகளாவிய நிலையில் பணியிடங்களில் புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போம் என்பது இவ்வாண்டு தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாக இருக்கிறது.

எழுச்சிமிக்க பணி சுற்றுச்சுழலில் தொழிலாளர்கள் இந்தப் புதிய நடைமுறைகளை விதைப்பது அவசியம் .

2021 – 2025 பணியிடப் பாதுகாப்பு  சுகாதாரப் பெருந்திட்டம் அதன் வடிவமைப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இத்திட்டமானது நாட்டின் வளப்பத்திற்கு அடித்தளமாக விளங்கிடும் பணியிடப் பாதுகாப்பு  சுகாதார நடைமுறைகளைப் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

இந்தப் பெருந்திட்டம் அமல்படுத்தப்படுகின்ற பட்சத்தில் பணியிடப் பாதுகாப்பு , சுகாதார நடைமுறைகளில் அதில் சம்பந்தப்பட்டவர்களின் உடனான வியூக உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் .

நாட்டின் தொழிலாளர் சந்தை கோவிட்-19 பெருந்தொற்றுத் தாக்கத்திலிருந்து கட்டம்கட்டமாக மீட்சிபெறும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here