வெல்லப்போகிறவரு யாரு, என்ன பேரு?

செல்  –   வாக்கு    யாருக்கு?

தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகளும், பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட உள்ளன.

கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வாக்கு சாவடி எண்ணிக்கையை பொறுத்து சுற்றுகளின் எண்ணிக்கை 15 முதல் 30 வரை செல்லலாம் எனக் கூறப்படுகிறது. காலை 9.30 மணிக்கு, முதல் சுற்று முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறும் என்றும், ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு 12 மணியாகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ் வழங்குவார்.

இதேபோல், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட உள்ளன. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாமில் 3 கட்டங்களாவும், மேற்குவங்கத்தில் 8 கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது.

: Tamil Nadu Assembly Election Results 2021 Live Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில்…

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், கேரளாவில் ஆளும் இடது சாரிக் கூட்டணியும் ஆட்சியைப்பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், அசாமில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 5 மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியை கொண்டாட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here