வெள்ளை நிறத்தில் விமானங்கள்

காரணமென்ன?
எல்லா விமானங்களும் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?
உலகில் அதிவேகமாக பயணம் செய்ய ஒரே வழி, விமானம் தான். பெரிய அளவிலான வர்த்தகமும் விமானப் போக்குவரத்து மூலம் நடக்கிறது. அது சரி, ஏன் விமானங்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?

* வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சால் பெரும்பாலும் எல்லா வண்ணங்களும் பாதிக்கப்படும். சீக்கிரம் மங்கிவிடும். ஆனால், வெள்ளை மங்காது.

* நிறங்கள் எல்லாம் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை உடையவை. இதனால், அதிகம் சூடாகவும் வாய்ப்பு உண்டு. வெள்ளை நிறம் ஒளி அலைநீளத்தைப் பிரதிபலிக்கிறது. அதனால் அது அதிக வெப்பத்தை உள்வாங்காது. இதனால் அதிகமாக விமானம் சூடாகாது.

* இவற்றையெல்லாம் தவிர்த்து, விமானத்துக்கு ஒருமுறை வண்ணம் பூச 33 லட்சம் முதல் 1.33 கோடி வரை செலவாகும். வண்ணங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அதன் செலவும் அதிகரிக்கும். அதனால்தான் இதுபோன்ற காரணங்களால் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here